சுக்கிரன் பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் அமோக வளர்ச்சி...துன்பங்கள் தொலைந்து போகும்!!

Shukra Gochar: சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2024, 02:11 PM IST
  • சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தரப் போகிறது.
  • குறிப்பாக வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது.
  • உங்கள் பணி இப்போது பாராட்டப்படத் தொடங்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் அமோக வளர்ச்சி...துன்பங்கள் தொலைந்து போகும்!! title=

Shukra Gochar: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் வாழ்வில் அனைத்து வித இன்பங்களையும் பெறுகிறார். செல்வச்செழிப்பில் திளைக்கிறார். அவருக்கு அனைத்து வித செலங்களும் கிடைக்கின்றன. அவர் வெற்றியின் உச்சம் தொடுகிறார்.

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சிலருக்கு இதனால் சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியில் இருக்கிறார். ஜனவரி 18, 2024 அன்று அவர் விருச்சிக ராசியில் இருந்து விலகி தனுசு ராசிக்குள் பெயர்ச்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் ஏற்படும். தனுசு ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகள்

மேஷம் (Aries)

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். நீங்கள் திடீரென்று உங்கள் வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கும். கடின உழைப்புடனும் நேர்மையுடனும் செய்யும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு வெற்றியைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும், காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனைத்து விதமான ஆதரவையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் என்ன முடிவுகளை எடுத்தாலும், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.  

கன்னி (Virgo)

சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தரப் போகிறது. குறிப்பாக வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. உங்கள் பணி இப்போது பாராட்டப்படத் தொடங்கும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும் நேரம் வரும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் தற்போது கிட்டும். குறிப்பாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் நல்லுறவை வளர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மேலும் படிக்க | பௌஷ் அமாவாசை அன்று இந்த விஷயங்களை செய்தால் வீட்டில் நல்லது நடக்கும்!

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இப்போது நிச்சயம் ஆகலாம். சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். கூட்டுப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள், மேலும் உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்ப்புகள் கிடைக்கும். பங்குச் சந்தையில் சிந்தித்து முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.

மகரம் (Capricorn)

சுக்கிரனின் பெயர்ச்ச்சி உங்கள் குடும்பத்துடனான உறவை பலப்படுத்தும். குடும்பத்தில் உள்ள அனைவரும் பரஸ்பரம் புரிந்துகோண்டு அன்பு பாராட்டும் நேரம் இது. உறவுகளில் அரவணைப்பு திரும்பும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்பம் தொடர்பான பல பிரச்சனைகள் தீரும். இருப்பினும், உங்கள் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

மேலும் படிக்க | சதயத்தில் சனி பகவான்... ஆதாயத்தை அள்ளப் போகும் ‘3’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News