புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், லாபம் கூடும்

Mercury Transit: புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2024, 12:54 PM IST
  • புதன் கும்ப ராசியில் தான் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
  • ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
  • ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், லாபம் கூடும் title=

Mercury Transit: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் இன்று அதிகாலை 5:48 மணிக்கு கும்ப ராசியில் பெயச்சி ஆனார். 

புத்திசாலித்தனம், கல்வி, கடின உழைப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதனின் பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் அதிகப்படியான மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

புதன் பெயர்ச்சியால் மகிழ்ச்சி மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்:

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். கும்ப ராசியில் புதன் பெயர்ச்சியாகி உள்ளதால் உங்களது சிந்திக்கும் திறனும், யோசித்து முடிவு எடுக்கும் திறனும் மேன்மை அடையும். உங்கள் பணி செய்யும் பாணியில் முன்னேற்றம் காணப்படும். நிதிநிலை நன்றாக இருக்கும். சொத்து, வாகனம் ஆகியவை வாங்கும் யோகம் உருவாகும். உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதே இந்த காலத்தில் உங்கள் இலக்காக இருக்கும். உங்கள் பொருளாதார நிலை முன்பை விட மிக திடமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இந்த காலத்தில் நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும்.

கன்னி (Virgo)

புதனின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பல பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் அறிவுக்கூர்மையால் பல நேர்த்தியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் மிகப்பெரிய வெற்றிக் காத்துக் கொண்டிருக்கின்றது. உங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...

கும்பம் (Aquarius)

புதன் கும்ப ராசியில் தான் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் உதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் சிந்தனையை ஒருங்கிணைத்து செயல்பட்டால் பல வெற்றிகளை காண்பீர்கள். கடின உழைப்பின் பரிபூரண பலன் இந்த காலத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News