முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!!

வயது என்பது வெறும் எண்கள் தான். 42 வயதிலும் உடம்பை பிட்டாகவும் வைத்திருக்கும் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்.

Last Updated : Feb 8, 2018, 02:18 PM IST
முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!! title=

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென். 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி  பட்டம் வென்றார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்.

பின்னர் சினிமா துறைக்கு வந்த இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் பாலிவுட் படம் 1996-ம் ஆண்டு வெளியான தஸ்தக். இவர் தமிழிலும் "ரட்சகன்" படத்தில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் "நோ பிராப்ளம்" என்ற ஹிந்தி திரைப்படம். 

தற்போது இவரை அடிக்கடி பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும். மற்ற நேரத்தை அவர் தனது உடம்பை ஸிளிம்பாகவும், பிட்டாகவும் வைத்துக்கொள்வதில் நேரத்தை செலவிடுகிறார். தற்போது 42 வயதாகும் அவர், ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் விடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

 

Trending News