ஸ்கூட்டியில் மாஸ் காட்டும் மணப்பெண்: மயங்கிப்போன நெட்டிசன்கள்

Funny Wedding Video: மணமகளின் இந்த ஸ்டைலை அனைவரும் விரும்புகின்றனர். இந்த வீடியோ வெளியானதும், நெட்டிசன்கள் இதை லைக் செய்து அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2022, 11:38 AM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஸ்கூட்டியில் மாஸ் காட்டும் மணப்பெண்: மயங்கிப்போன நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மணமகன் மணமகளின் வீடியோ வழக்கமாக வைரல் ஆவதுண்டு. இவர்களின் மகிழ்ச்சி, ஆரவாரம், சந்தோஷம், ஆடல் பாடல் என அனைத்தும் காண்பதற்கு நன்றாக இருக்கும். மணமக்களின் இந்த உணர்வுப்பூர்வமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | திடீரென கூச்சலிட்ட மணமகள்: அப்படி என்னத்ததான் பார்த்தாங்க? வைரல் வீடியோ 

அதில் மணப்பெண் ஒருவர் சாலையில் ஸ்கூட்டி ஓட்டுவதைக் காண முடிகிறது. அந்த மணப்பெண் மிகவும் வித்தியாசமாக திருமண பந்தலை விட்டு ஓடுமாறு மக்களையும் அறிவுறுத்துகிறார். மணமகளின் இந்த ஸ்டைலை அனைவரும் விரும்புகின்றனர். இந்த வீடியோ வெளியானதும், நெட்டிசன்கள் இதை லைக் செய்து அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர்.

மாஸாக ஸ்கூட்டி ஓட்டி வரும் மணப்பெண் 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணப்பெண் ஒருவர் முழு அலங்காரத்துடன் ஸ்கூட்டி ஓட்டிச் செல்வதை காணமுடிகிறது. மேலும், பின்னணியில் ஒரு பாடலும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. வீடியோவில் மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். எனினும் இந்த காணொளி மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 

திருமணத்தில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் இப்போதே ஓடிப்போய் விடுங்கள் என்ற வேடிக்கையான செய்தி வீடியோ மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ  முழுவதும் ஒரு வேடிக்கையான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 

வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

வித்தியாசமான மணமகள் 

திருமண பந்தலில் இருந்து மணப்பெண் ஓடுவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. வீடியோவில் மணமகளின் வித்தியாசமான பாணி காணக்கிடைக்கிறது. ‘ஓடும் மணப்பெண்’ என வீடியோவிற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | குங்ஃபூ சண்டையில் கலக்கும் பூனைக்குட்டி...வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News