TDCC வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது ஏன்? திடுக்கிடும் காரணம் என்ன?

RBI Imposes Penalty On TDCC Bank: ரிசர்வ் வங்கி TDCC வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது... ஆய்வு அறிக்கை மற்றும் தொடர்புடைய அனைத்து கடிதங்களையும் ஆய்வு செய்த பிறகு மத்திய ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது

1 /8

ரிசர்வ் வங்கி TDCC வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆய்வு அறிக்கை மற்றும் தொடர்புடைய அனைத்து கடிதங்களையும் ஆய்வு செய்த பிறகு ஆர்பிஐ அபராதத் தொகையை விதித்துள்ளது

2 /8

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான  விதிமுறைகளையும், வழிகாட்டல்களையும் ரிசர்வ் வங்கி உருவாக்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது

3 /8

தானே மாவட்ட மத்திய கூட்டுறவு (டிடிசிசி) வங்கி ஒன்று, வங்கியின் இயக்குநருக்கு கடன் வழங்கியபோது வங்கி விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.  

4 /8

தானே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

5 /8

டிடிசிசி வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்டது 

6 /8

வங்கி ஒழுங்குமுறை (banking regulations) சட்டம், 1949 இன் பிரிவுகள் 20 மற்றும் 56 ஐ மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

7 /8

முறைகேடுகள் நடந்திருப்பது தெரிந்த உடனே, வங்கிக்கு காரணம் கேட்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தனிப்பட்ட விசாரணையின் போது வங்கியின் நோட்டீஸ் மற்றும் வாய்மொழி விசாரணையில் வங்கி அளித்த பதிலைப் பரிசீலித்த பிறகு, சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி முடிவு செய்ததாக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 /8

மார்ச் 31, 2022 நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்து தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மூலம் வங்கியின் சட்டப்பூர்வ ஆய்வு நடத்தப்பட்டது.