தொப்பையால் தொல்லையா? இந்த மேஜிக் பானம் தொப்பையை தொலைக்க உதவும்

Cumin Water as Weight Loss Drink: இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதாலும், பலரது உடல் இயக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த பிரச்சனை கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் உடல் செயல்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்தால், அதை குறைப்பது மிக கடினம் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டு விட்டார்கள். 

எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். அவற்றில் ஒன்றான ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை குடித்தால், மிக விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். இதை தயார் செய்யும் வழிமுறையும் மிக எளிதானது. 

1 /4

வயிற்று கொழுப்பைக் குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், அனைவரது வீட்டிலும் இருக்கும் சீரகம் இதில் உங்களுக்கு கை கொடுக்கும். இதை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், அதிகரிக்கும் எடையைக் குறைக்க சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று கூறினார். இது உடல் கொழுப்புக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.  

2 /4

சீரகம் இல்லாமல் பல இந்திய உணவு வகைகளின் சுவை முழுமையடைவதில்லை. இதை சாப்பிடுவது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இதன் மூலம்  அனைத்து வயிற்று கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீரில் கலோரி குறைவாக இருப்பதாலும், இது கொழுப்பைக் குறைக்க உதவுவதாலும், உடல் எடை குறைப்புக்கு இதை குடிப்பது நன்மை பயக்கும். சீரக நீரில் இரும்புச்சத்து மிக அதிகமாக காணப்படுவதோடு, உடலின் வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

3 /4

சீரக தண்ணீர் தயார் செய்ய, 2 தேக்கரண்டி சீரக விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறியதும் பருத்தி துணியால் வடிகட்டவும். பின், இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். தொடர்ந்து 2-3 வாரங்கள் குடித்து வந்தால் அதன் பலன் தெரியும்.

4 /4

நீங்கள் விரும்பினால், சீரக விதைகளை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். சீரகப் பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)