ஆர்சிபிஐ சிதைத்த அந்த 5 பவுலர்கள் யார்?

சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணியை மீண்டும் பழைய ஆர்சிபி அணியாக மாற்றிய பெருமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர்களையே சேரும்

 

2013 ஆம் ஆண்டு இதே நாளில் 263 ரன்கள் எடுத்த அந்த அணி, 2017 ஆம் ஆண்டு இதே நாளில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2022 ஆம் ஆண்டு இன்றைய, அதாவது அதே ஏப்ரல் 23 ஆம் தேதி 68 ரன்களுக்கு அவுட்டானது.

1 /5

இதற்கு முக்கிய காரணம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களையே சேரும். ஆரம்பம் முதலே அமர்களமாக பந்துவீசினர். ஜேசன் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை எடுத்து ஆர்சிபி சரிவை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

2 /5

அவருக்கு அடுத்தபடியாக சிறப்பாக பந்துவீசியவர் தமிழக வீரர் நடராஜன். 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வரும் மொத்தம் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

3 /5

சுழற்பந்துவீச்சாளர் சுஜித் சிறப்பாக பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசிய அவர் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

4 /5

புயல்வேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக், அதிவேகமாக பந்துவீசி இப்போட்டியிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்த ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

5 /5

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக விளங்கிய புவனேஷ்வர் குமார் 2.1 ஓவர் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.