முகம் தங்கம் போல மின்ன வேண்டும? ‘இந்த’ 7 உணவுகளை சாப்பிடுங்கள்!

Skin Care Tips: நமது முகம் பளபளவென மின்ன வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குள்ளும் இருக்கும். அதை நிறைவேற்றிக்கொள்ள, சில ஹெல்தியான டயட்டை நாம் பின்பற்ற வேண்டும். 

Tips For Healthy Glowing Skin: சரும பராமரிப்பிற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாக்கவும் ஹெல்தியான டயட் உதவும். சரியான உணவுகளை பின்பற்றினால் முகம் பளபளப்பாக மாறும். இருப்பினும் ஒவ்வொருவரின் முக சருமமும் வேறு படும் என்பதால், இங்கு குறிப்பிடப்படும் உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது நலம். 

1 /7

ஹெல்தியான சருமத்திற்கு சமையலறையில் உள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொண்டாலே போதுமானதாகும். நமது சருமம் ஜொலிப்பதற்கும், பொலிவிழந்து போவதற்கும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் காரணமாக இருக்கலாம். முகத்திற்கு பொலிவு கொடுக்கும் உணவுகளின் லிஸ்ட் இதோ!

2 /7

ஒமேகா 3 உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். ஃபேட்டி மீன்கள் உள்பட சில கடல்வாழ் உயிரினங்களில் ஒமேகா 3 வகை சத்துகள் அடங்கியுள்ளன. அது மட்டுமன்றி, இஞ்சி, ப்ளூ பெர்ரி உள்ளிட்ட உணவுகளையும் ஹெல்தியான சருமத்திற்காக எடுத்துக்கொள்ளலாம். 

3 /7

வால்நட்ஸ், ஸ்ப்ரிங்கிள்ஸ், பாதாம் உள்ளிட்டவைகளிலும் சருமத்திற்கு நன்மை பயக்கும். வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடண்ட்ச் நன்மைகள் நிறைந்த நட்ஸ் வகை உணவுகளில் சருமத்தை பளபளப்பாக்குவதற்கான குண நலன்கள் உள்ளன. 

4 /7

தினசரி, உங்களின் உணவில் சாதத்தை தவிர காய்கறி-பழ வகைகளை சேர்த்துக்கொள்வது நல்லது. ப்ரக்கோலி, மிளகு, கீரை வகைகள் உள்ளிட்டவை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இது, சருமத்தை உள்ளூர பாதுகாத்து ஜொலிக்க வைக்கும். 

5 /7

அவகேடோவை பிரட் டோஸ்டில் பலர் சேர்த்து சாப்பிடுவர். இதில், வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன. சருமத்தின் நல்ல நண்பனாக பாதுகாக்கப்படும் உணவுகளில் ஒன்று இது. இதை ஸ்மூதி அல்லது ஜூஸாகவும் செய்து சாப்பிடலாம். 

6 /7

கிரீன் டீயை பலர் உடல் எடையை குறைக்க குடிப்பர். இது, சூர்ய கதிர்களினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும். உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க, சரும வறட்சி பெறாமல் இருக்க கிரீன் டீ உதவும். 

7 /7

தக்காளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் பண்புகள், சருமத்தை நன்கு பாதுகாக்க உதவும். சருமத்தில் இருக்கும் செல்கள் அழியாமல் பாதுகாக்கும் தக்காளியை உணவிலும் சேர்க்கலாம், முகத்திலும் தடவி கொள்ளலாம்.