வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!

Peerkangai Health Benefits: பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. பீர்க்கங்காய், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

பீர்க்கங்காய்  உடல் எடையைக் குறைப்பது முதல், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கோடை கால காயகறியான இதில் நிறைந்துள்ள ஆரோக்கிய  நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

1 /8

Peerkangai Health Benefits: பீர்க்கங்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றோடு, அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி.

2 /8

கல்லீரல் ஆரோக்கியம்: பீர்க்கங்காய், உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகள் மட்டுமல்லாது ஆல்கஹால் எச்சங்களையும் அகற்ற உதவும். கல்லீரலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கும் என்பதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான காய்கறியாக கருதப்படுகிறது. 

3 /8

உடல் பருமன்: பீர்க்கங்காய் சாப்பிடுவது எடை இழப்புக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது தவிர, எடை இழப்புக்கு மிகவும் தேவையான நீர்ச்சத்து நிறைந்தது பீர்க்கங்காய்.

4 /8

செரிமானம்: ஆயுர்வேதத்தில் பீர்க்கங்காய் செரிமானத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. ஜீரணிக்க எளிதானது  என்பதோடு, கோடைக்கு உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும்.  இது சளி, பித்தத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும்.  

5 /8

நீரிழிவு: சுகர் லெவலை குறைக்க நினைக்கு நீரிழிவு நோயாளிகளுக்கு பீர்க்கங்காய் ஒரு வரப்பிரசாதம். முதலாவதாக, இது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இரண்டாவதாக, நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. 

6 /8

மலச்சிக்கல்: நார்சத்து நிறைந்த  பிரச்சனையை நீக்குவதற்கும் பாகற்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். எனவே, உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், இதனை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7 /8

சரும ஆரோக்கியம்: பீர்க்கங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது சருமத்தில் உள்ள முகப்பரு பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள நீர்சத்து சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குவதோடு, சருமத்தை உள்ளிருந்து டீடாக்ஸ் செய்து பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது. 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.