ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!

Weight Loss Tips: உடல் பருமன் என்பது இன்று பலரிடம் சர்வசாதாரணமாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க, மிக கடினமான, நம்மால் முடியாத பலவற்றை செய்து பார்க்கும் நாம், சில சமயங்களில் மிக எளிய வழிகளை மறந்து விடுகிறொம். நம் சமையலறை மசாலாக்களில் சிலவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அந்த மசாலாக்களில் வெந்தயமும் ஒன்று. வெந்தயத்தை வைத்து எடையை குறைக்கும் (Weight Loss) சில எளிய வழிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /7

உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் வெந்தயம் உதவுகிறது. இதை நாம் பல வழிகளில் பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க வெந்தயத்தின் சரியான பயன்பாடு பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /7

உடல் எடையை குறைக்க வழக்கமான தேநீருக்குப் பதிலாக வெந்தய டீ-ஐ குடிக்கலாம். இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பும் குறையும். இதை செய்ய, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும், அது பாதியாக குறைந்ததும் அதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். 

3 /7

உடல் எடையை குறைக்க காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீடாக்ஸ் தண்ணீர் குடிப்பது பலன் தரும். வெந்தய நீர் மிக ஆரோக்கியமான டீடாக்ஸ் பானமாகும். இதை செய்ய இரவு வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும். 

4 /7

எடை குறைப்புக்கு காலையில் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இதற்கு வெந்தய விதைகளை முளைக்க வைத்து வழக்கமான காலை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். முளைகட்டிய வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வெந்தயத்தை முளைகட்ட, அதை நன்கு கழுவி, ஈரமான துணியில் மூடி, இரண்டு அல்லது மூன்று இரவுகள் அப்படியே விடவும்.

5 /7

வெந்தயத்தை கழுவி, உலர்த்தி, லேசாக வறுத்து, அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த பொடியை தயிர் பச்சடி, கலந்த சாதங்கள், காய்கறிகள், சால்ட், சாம்பார் என பல உணவுகளில் சேர்க்கலாம். இது கூடுதல் சுவையை சேர்ப்பதுடன் உடல் எடையையும் குறைக்க உதவும். இதை அப்படியே நீரில் கலந்தும் குடிக்கலாம். 

6 /7

வெந்தயத்தில் உள்ள வைட்டமின்-சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. மேகும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. 

7 /7

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.