Post Office: வெறும் 500 ரூபாய் முதலீட்டில் லட்சங்களை கொடுக்கும் சூப்பர் திட்டங்கள்

போஸ்ட் ஆபீஸில் நீங்கள் வெறும் 500 ரூபாய்க்கும் குறைவான திட்டங்களில் முதலீடு செய்து லட்சங்களை வருமானமாக பெறலாம்.

 

1 /7

தபால் அலுவலகம் உள்ளிட்ட மத்தி அரசின் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். எளிய மக்களும் முதலீடு செய்யும் வகையில் இதுபோன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் பெரும் வருமானம் கிடைக்கும். தபால் அலுவலகத்தின் அத்தகைய திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

2 /7

வெறும் 500 ரூபாய் முதலீடு செய்யக்கூடிய திட்டத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் படிப்படியாக முதலீடு செய்யக்கூடிய தொகையைக் கூட அதிகரிக்கலாம். அந்த திட்டத்தின் பெயர் என்ன? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

3 /7

தபால் நிலையத்தில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் அது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு செய்யலாம். 500 ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 6000 ரூபாய் டெபாசிட் செய்வீர்கள்.

4 /7

தற்போது PPFக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்வதன் மூலம், 15 ஆண்டுகளில் ரூ.1,62,728-ஐ 7.1 சதவீத வட்டி கிடைக்கும். அதனை மேலும் 5.5 ஆண்டுகள் நீட்டித்தால், 20 ஆண்டுகளில் 2,66,332 ரூபாயும், 25 ஆண்டுகளில் 4,12,321 ரூபாயும் கிடைக்கும்.

5 /7

இதேபோல் தபால் நிலையத்தில் உங்கள் மகளின் பெயரில் சுகன்யா சம்ரித்தி கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

6 /7

தற்போது அதற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் மாதம் ரூ.500 கூட முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.90,000 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 8.2 சதவீத வட்டியில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2,77,103 கிடைக்கும்.  

7 /7

தபால் நிலையத்திலும் ஆர்டி செய்து கொள்ளலாம். 100 ரூபாயிலிருந்தும் ஆரம்பிக்கலாம். தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் 6.7% ஆகும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.35,681 கிடைக்கும்.