மூளை ஜெட் வேகத்தில் வேலை செய்ய... நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்!

Memory Boosting Foods: மூளைக்கு ஆற்றலை வழங்கும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், உங்கள் குழந்தை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாகவும் மேதையாகவும் இருப்பார்கள்.

சில உணவுகளை உட்கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றன. இந்த உணவுகள் மூளையை கூர்மையாக்கி சிறப்பாக செயல்பட உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பது மட்டுமின்றி மூளையை கூர்மையாக்கும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /7

நினைவாற்றலுக்கான சூப்பர் உணவுகள்: குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நல்ல நினைவாற்றல் தேவை. வாழ்க்கையில் சாதனை படைக்கவும், மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்கவும் மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை அதிகரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

2 /7

தக்காளி: நினைவாற்றலை அதிகரிக்க உதவும் லைகோபீன் என்ற தனிமம் தக்காளியில் உள்ளது. குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுப்பதால் ஞாபக சக்தியை அபாரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

3 /7

பச்சை காய்கறிகள்: மூளையின் செயல்பாட்டிற்கு தாவர அடிப்படையிலான உணவு உணவு சிறந்தது. பச்சைக் காய்கறிகள், மூளையின் ஆற்றலுக்கு தேவையான பல்வேறு வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.

4 /7

நட்ஸ்: மூளை ஆற்றலுக்கு மிகவும் ஆக்ஸிஜனேற்றிகள், துத்தநாகம், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அனைத்தும் உலர்ந்த பழங்கள் அதாவது நட்ஸ்களில் காணப்படுகின்றன. அதிலும் பாதாம், வாதுமை பருப்பு நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் உணவு.  

5 /7

மீன் உணவுகள், மூளை சக்தியை அதிகரிப்பதற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் மீன் உணவுகளில் காணப்படுகின்றன. இவை மூளையை கூர்மையாக்குகின்றன.

6 /7

கோதுமை, பார்லி, கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் பிற முழு தானியங்களில் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவும் கூறுகள் உள்ளன. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கின்றன.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.