கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கன்னிபகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ள நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கன்னிபகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

1 /6

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நானும் ரௌடிதான் படம் மூலம் இணைந்து காதலித்து வந்தனர்.   

2 /6

2022ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.   

3 /6

நயன்தாரா சில மாதங்களுக்கு முன்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். அடிக்கடி இவர்கள் கப்புள் கோல்ஸ் செய்து வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகும்.  

4 /6

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய நடிகை நயன்தாரா இன்று அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார்.   

5 /6

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.  

6 /6

அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் விக்னேஷ் சிவன் தலப்பாகை அணிந்து அய்யாவை தரிசனம் செய்தார். அவருடன் அவரது குடும்பத்தாரும் உடன் இருந்தனர்.