சருமத்தை பளபளக்கச் செய்யும் யம்மி ஜூஸ்! அபார ருசியில் கேரட் + கொத்தமல்லி பானம்

Healthy Drink: கேரட் மற்றும் கொத்தமல்லி இரண்டுமே வைட்டமின் சி நிறைந்தவை, இவை இரண்டையும் சேர்த்து தயாரித்த பானத்தை பருகி வந்தால், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் உறுதியாக கிடைக்கும்

பழச்சாறுகள், ஆரோக்கியமானவை, அழகை மேம்படுத்துபவை என்றாலும், பழங்களில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால், காய்கறிகளை சாறு எடுத்து பருகும்போது ஆரோக்கியத்திற்கு அமுதம் போன்ற பலன்களை அளிக்கும்.

1 /10

பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகள் அவசியம். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு, எளிதாக செய்யக்கூடிய கேரட் கொத்தமல்லி சாற்றை வாரத்தில் நான்கு முறையாவது பருகுங்கள்

2 /10

கேரட் கொத்தமல்லி சாறு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது 

3 /10

பழச்சாறுகளில் ஒப்பீட்டளவில் சர்க்கரை அதிகமாக இருப்பாதால், அதிக அளவில் பழச்சாறு குடிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆனால் பல்வேறு காய்கறிகளை எளிய காம்பினேஷன்களில் சேர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான ஜூஸாக குடிக்கலாம்

4 /10

மாசு மருவில்லாத சருமத்தைப் பெற விரும்புபவர்களுக்கு கொத்தமல்லியும் கேரட்டும் இணைந்த காம்பினேஷன் ஏற்றது

5 /10

கேரட் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது கொலாஜன் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாக்கவும் கொலாஜன் அவசியம். கொத்தமல்லியில் நீரில் கரையக்கூடிய வைட்டமின் உள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து பானமாக பருகுவது சரும அழகை அதிகரிக்கும்

6 /10

கேரட்டில் பல வகையான நிறங்கள் உண்டு.எந்த கேரட் கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம்

7 /10

ஊட்டச்சத்து மிக்க கேரட்டை சமைத்தும் உண்ணலாம், சாலடாகவும் சாப்பிட்டலாம், பானமாகவும் பருகலாம். 

8 /10

சிவப்பு கேரட் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது

9 /10

விட்டமின் சி அதிக அளவில் இருப்பதால், தினம் ஒரு கேரட்டாவது உண்பது வைட்டமின் சியின் தேவையை பூர்த்தி செய்யும்

10 /10

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். இந்த சாறு மற்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திற்கு எதிராக போராட உதவுகிறது, இதனால் உங்கள் நீண்ட கால சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது