தொப்பை கொழுப்பை துரத்தி அடிக்கும் பக்காவான பருப்பு வகைகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் மக்களை படுத்தியெடுக்கும் பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. நமது உடல் எடை எளிதாக அதிகரித்து விடுகிறது, ஆனால், இதை குறைப்பதற்கு பலவித முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.

Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைப்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கின்றது. மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செய்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். உடல் எடையை குறைக்க உதவும் ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /7

நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக இந்நாட்களில் பலருக்கு உடல் எடை அதிகரிப்பு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் பின்பற்றினால், எடை அதிகரிக்காமல் தவிர்க்கலாம். 

2 /7

உடல் எடையை குறைக்க பருப்பு வகைகள் மிக பயனுள்ளதாக இருக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பருப்புகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை நாம் உட்கொண்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவும் சில அதிக நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளை (High Fiber Beans) பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /7

கருப்பு பீன்சில் மற்ற பீன்ஸ் வகைகளை விட அதிக நார்ச்சத்தும் வித்தியாசமான கார்போஹைட்டுகளும் காணப்படுகின்றன. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான சத்துக்களை பெறலாம். இது உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவும். 

4 /7

காராமணி அதிக அளவிலான சத்துகளை உள்ளடக்கிய ஒரு சத்தான பருப்பு வகையாகும். இதை சுண்டலாக சாப்பிடலாம். மேலும், இதை சாலட், சூப், கூட்டு, என அனைத்திலும் சேர்க்கலாம், ஒரு கப் காராமணியில் சுமார் 11 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, நமது வயிற்றுக்கு முழுமையான உணர்வை அளிக்கின்றது. தொப்பை கொழுப்பை கரைக்கவும் (Belly Fat), உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. 

5 /7

கொண்டைக்கடலை ஒரு பிரபலமான பருப்பு வகையாகும். ஒரு கப் கொண்டைக்கடலையில் சுமார் 12 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை சுண்டலாகவும், அல்லது கிரேவியாகவும் உட்கொள்ளலாம். இது தவிர இதை கரி, கூட்டி, கலந்த சாதங்களிலும் சேர்க்கலாம். ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக இதை மாலை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். இது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

6 /7

ராஜ்மாவில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எடை இழப்பு மட்டுமின்றி இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையாக பல வித ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. 

7 /7

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை