மாலை நேரத்தில் இதை மட்டும் சாப்பிடாமல் இருங்க.. சும்மா சூப்பரா எடை குறையும்

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இந்த காலத்தில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. உடல் பருமனை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

பல சமயங்களில் மிக எளிய இயற்கையான வழிகளின் மூலம் நமது உடல் எடையை நம்மால் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, மதிய உணவுக்கும் இரவு உணவிற்கும் இடையிலான மாலை நேரத்தில் மக்கள் உட்கொள்ளும் உணவில் செய்யும் தவறால் உடல் ஆரோக்கியம் கெடுகின்றது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை நாம் செய்யக்கூடாத சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒருவருக்கு பசித்தாலும் அந்த நேரத்தில் முழு உணவையும் சாப்பிடத் தோன்றாது. அந்த நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

2 /9

இந்த நேரத்தில் உட்கொள்ளப்படும் சில ஆரோக்கியமற்ற பதார்த்தங்களின் மூலம் நாமே பல நோய்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆகையால் இந்த நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமாகும்.

3 /9

மாலை வேளையில் கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாத 5 உணவுகளை பற்றி இங்கே காணலாம். இவற்றால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களும் உங்கள் உடலை அணுகக்கூடும். 

4 /9

மாலையில் எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மாலையில் சமோசா மற்றும் சாட் போன்றவற்றை உட்கொண்டால், எடை வேகமாக அதிகரிக்கும், கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகும்.   

5 /9

நொறுக்குத் தீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் மாலையில் உட்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவு பல வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும், எடையை அதிகரிக்கும்.

6 /9

மாலையில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தினால் இரவு தூக்கம் கெடுவதுடன், உடல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும்.

7 /9

மாலையில் சீஸ் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் சோடியம் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

8 /9

 இனிப்புகள்: மாலையில் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதையும் நிறுத்துங்கள். ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இவை பல நோய்களை உண்டாக்கும். மேலும் இதனால் எடையும் விரைவாக அதிகரிக்கும். 

9 /9

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.