MS Dhoni: ராஞ்சியில் உள்ள தல தோனியின் பங்களாவிற்கு ஒரு ரவுண்ட் போகலாமா..!!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK ) கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ராஞ்சியில், ஒரு பெரிய பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா தோனியுடன் (Ziva Dhoni) வசித்து வருகிறார்.

 

முன்னாள் டீம் இந்தியா கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்டின் ராஞ்சியைச் சேர்ந்தவர். கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாதபோது, அவர்  தனது சொந்த ஊரில் நிறைய நேரம் செலவிடுகிறார். தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் பல போட்டோக்களை காணலாம். முன்னாள் இந்திய கேப்டன் பங்களாவுக்கு ஒரு ரவுண்ட் போகலாமா...

1 /6

எம்.எஸ்.தோனியின் அரண்மனை போன்ற பண்ணை வீடு தான் இது. ஏழு ஏக்கர் பரப்பளவில் இந்த பங்களா அமைந்துள்ளது.

2 /6

ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை இல்லத்தில் உடல் ப்யிற்சி செய்வதற்கான இடம், நீச்சல் குளம் மற்றும் பூங்கா ஆகியவை உள்ளன. சில உள்விளையாட்டு அரங்கங்களும் உள்ளன.

3 /6

தோனி மற்றும் சாக்ஷியின் படுக்கையறை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,  இது அடர்ந்த பழுப்பு நிற ஹெட் போர்டுடன் கூடிய ஒரு பெரிய படுக்கையை கொண்டுள்ளது, இந்த போர்ட் கிட்டத்தட்ட  அறையின் கூரை பகுதியை தொடுகிறது.

4 /6

தோனியின் பண்ணை இல்லத்தின் உட்புறங்கள் பிரமாண்டமான சரவிளக்குகள் மற்றும் படுக்கைகள் மற்றும் அலங்காரங்கள் காண மிகவும் அற்புதமானவை.

5 /6

தோனி தனது பண்ணை வீட்டில் பல குடும்ப நண்பர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் நேரம் கழிக்க ஒரு பிரத்யேக விருந்துக்கான இடத்தை அமைத்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இந்த இடத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

6 /6

தோனி பைக்குகளின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை, அவர் தனது பைக்குகளை நிறுத்த தனது வீட்டில் ஒரு பிரத்யேகமான இடத்தை அமைத்துள்ளார்.