புத-ஆதித்ய யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

Mercury Transit Effects: புத்திசாலித்தனத்தை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், மே 10ம் தேதி அதாவது அட்சய திருதியை நாளில் புதன் மேஷ ராசியில் நுழைவார். சூரிய பகவான், ஏற்கனவே மேஷ ராசியில் உள்ள நிலையில், சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது. 

 

புத-ஆதித்ய யோகத்தினால் சில ராசிக்காரர்கள், வேலை, தொழில், கல்வி,  குடும்பம் என அனைத்து வகையிலும் வெற்றிகளை குவித்து, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். செல்வ வளத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

1 /7

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்கள் பெயர்ச்சி ஆகும் போது, அதனால், சில கிரக சேர்க்கைகளும்  ஏற்படுகின்றன. மே 10 ஆம் தேதி அதாவது அட்சய திருதியை நாளில் புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது சூரியனுடன் புதன் இணைவார். 

2 /7

புதன் பெயர்ச்சியினால் சூரியன் புதன் இணைவதால்,புத-ஆதித்ய யோகம்  மட்டுமல்லாது லக்ஷ்மி நாராயண யோகமும் உருவாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அட்சய திருதியை அன்று இந்த இரண்டு யோகங்களும் அமைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். 

3 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியும் புத ஆதித்யோகமும், அபரிமிதமான பலனை அள்ளிக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் குறைவே இருக்காது. பதவி உயர்வு, சம்பள உயர்வுகான வாய்ப்பு அதிகம் உண்டு. மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு உண்டு.. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

4 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சியும் புத ஆதித்யோகமும் பல வகையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். புதிய வருமான ஆதாரங்களால் நிதி நிலைமை மேம்படும். ருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருப்ப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இணக்கமும் நிம்மதியும் இருக்கும்.

5 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு புத பகவானும் சூரிய பகவானும் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்த பயணம் மூலம், வரும் காலத்தில் பெரிய அளவில் ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடல் நிலை சிறப்பாகவே இருக்கும். நிதி நிலைமை மேம்படும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும்.  

6 /7

இந்து மதத்தில் அக்ஷய திருதியை தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்ஷய திருதியை பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் சுக்ல பக்ஷ திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குதும், அன்னை மகாலட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜையும் செய்வதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.