Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்..

Mamitha Baiju In CSK vs KKR Match : பிரேமலு படம் மூலம் தென்னிந்த அளவில் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

Mamitha Baiju In CSK vs KKR Match : சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட படம், பிரேமலு. இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், கதாநாயகியாக நடித்திருந்தவர், மமிதா பைஜு. இவரை பல தமிழ் ரசிகர்கள் க்ரஷ்ஷாக வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியை மமிதா, நேரில் கண்டுகளித்தார். 

1 /7

சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பிரபலமானவர், மமிதா பைஜு. மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆனவராக இருக்கிறார். 

2 /7

சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘ரெபல்’ படத்திலும் மமிதா நாயகியாக நடித்திருக்கிறார். 

3 /7

மமிதா, அடுத்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

4 /7

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைப்பெற்றது. 

5 /7

இந்த போட்டியை, நடிகை மமிதா பைஜு நேரில் கண்டு ரசித்திருக்கிறார். இது குறித்த பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

6 /7

மமிதாவை மஞ்சள் உடையில் பார்த்த ரசிகர்கள், இவரது புகைப்படங்களை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

7 /7

மமிதா, அடுத்து இன்னும் சில மலையாள படங்களில் கமிட்டாகி பிசியாக வலம் வரும் இளம் கதாநாயகியாக இருக்கிறார்.