இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?

சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

 

1 /5

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான 2 போட்டிகளுக்கும் தோல்வியை சந்தித்த சென்னை அணி, சேப்பாக்கத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை பெற்றது.  

2 /5

இந்த வெற்றி சென்னை அணி பிளேஆப் கனவை தக்கவைத்து.  தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் உள்ளன.  

3 /5

இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாதது.   

4 /5

நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ 3வது இடத்தில் இருந்த சென்னை அணியை நான்காவது இடத்திற்கு தள்ளி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் மீண்டும் 3வது இடத்திற்கு அல்லது 2வது இடத்திற்கு செல்ல முடியும்.  

5 /5

மறுபுறம் பஞ்சாப் அணி 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.  டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சேஸிங்காக இது மாறி உள்ளது.