CSK Vs SRH : “தோத்துட்டே இருக்கீங்களே..” சி.எஸ்.கே ரசிகர்களின் குமுறல்கள்! வைரலாகும் மீம்ஸ்..

IPL 2024 CSK Vs SRH Match Tamil Memes : சென்னை Vs ஹைதராபாத் போட்டியில், சென்னை அணி தோல்வியை தழுவியதை அடுத்து, ரசிகர்கள் பலர் வேடிக்கையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

IPL 2024 CSK Vs SRH Match Tamil Memes : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்ததில் இருந்து, மீம் கிரியேட்டர்கள் பலருக்கு இதுதான் பெரிய கண்டண்டாக இருக்கிறது. அதிலும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் போட்டிகளின் போது இவர்களை கையில் பிடிக்க முடியாது. இதுவரை நடைப்பெற்ற 4 போட்டிகளில் சிஎஸ்கே அணி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. நேற்று ஐதராபாத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி, தோல்வியை தழுவியதை அடுத்து, இது குறித்த மீம்ஸ்களை ரசிகர்கள் இணையத்தில் பறக்க விட்டு வருகின்றனர். அவற்றை இங்கு பார்ப்போம்.

1 /8

நம்ம ஊரு மீம் கிரியேட்டர்களுக்கு ஐபிஎல் திருவிழா ஆரம்பித்தாலே கையில் லட்டு கிடைத்தது போல படு குஷியாக இருக்கும். இந்த சீசனை பொறுத்தவரை, சென்னை அணி 4 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இன்னிங்க்ஸ் முடிவில் சென்னை அணி 165 ரன்களை அடித்தது. அடுத்த இன்னிங்க்ஸில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 18 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை சேஸ் செய்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்வி ஏற்படுத்திய தழும்பை சிரிப்பு வரவழைக்கும் மீம்ஸ் மூலம் ரசிகர்கள் ஆற்றி வருகின்றனர். 

2 /8

இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியும் ஜெயிக்காத மும்பை அணி, ஒரு போட்டி மட்டும் ஜெயித்த பெங்களூரு அணியின் லிஸ்டில் சேர்ந்து விடுவோமோ?

3 /8

ஒரு வேளை, புதிதாக கமெண்ட்ரி கொடுக்க வந்திருக்கும் கோபிநாத்தை பற்றி கூறுகிறார்களோ?

4 /8

விட்டா 10 ஓவருக்குள்ளையே மேட்சை முடித்திருப்பர்கள் இந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்!

5 /8

எப்போதும் ஜெயிக்கும் ஹைதராபாத் அணியிடமே இந்த நிலமையா?

6 /8

“யாருன்னு தெரியாம கைய வெச்சுட்டாங்க போல..”

7 /8

“சொல்லுங்க ஜட்டு சொல்லுங்க..எப்படி அந்த 10 ரன் அடிச்சீங்க?”

8 /8

“தோனி ஆடியும் ஒரு பிரயோஜனமும் இல்லாம போச்சே...” சென்னை அணி, தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியுற்றதால், “தோத்துட்டே இருக்கீங்களே டீம்” என்றும் இணையத்தில் குமுறி வருகின்றனர்.