முதல்முறையாக ஓட்டு போடுறீங்களா... இந்த 7 விஷயங்களை சரியா நோட் பண்ணுங்க!

7 Important Note For First Time Voters: முதல்முறை வாக்காளர்கள் வாக்குச் செலுத்தும்போது இந்த 7 விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இதன்மூலம், உங்கள் வாக்கு சரியாக பதிவாகும்.

  • Apr 18, 2024, 14:20 PM IST

வாக்குச் செலுத்துவது என்பது ஜனநாயக கடமை. அத்தகைய கடமையை செய்ய செல்லும்போது அனைத்து வழிமுறைகளை சரியாக பின்பற்றவும்.

 

1 /7

உங்கள் அருகிலுள்ள வாக்குச் சாவடியை முதலில் கண்டுபிடியுங்கள். அங்குதான் நீங்கள் வாக்கை செலுத்த முடியும்.   

2 /7

வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு வாக்குச்சாவடி அலுவலர் உங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்த்து உங்கள் அடையாள அட்டையை கேட்பார்.  

3 /7

உங்கள் பெயரையும், அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு, உங்கள் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். மேலும் நீங்கள் வாக்குச் செலுத்துவதற்கான ஒப்புகைச் சீட்டைக் கொடுப்பார்கள். மேலும், பதிவேட்டில் உங்கள் கையொப்பம் கேட்கப்படும்.

4 /7

அதன்பின், மூன்றாம் வாக்குச்சாவடி அலுவலரிடம் அந்த ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து, உங்கள் கை விரலில் வைக்கப்பட்ட மையை காட்டியபின், வாக்குச்சாவடி வாக்கு செலுத்தும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.  

5 /7

வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) நீங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தின் பட்டனை சரியாக அழுத்தவும். அந்த சின்னத்தில் பக்கத்தில் பீப் ஒலி, சிவப்பு ஒளி உங்கள் தேர்வை உறுதிப்படுத்தும்.  

6 /7

VVPAT இயந்திரத்தில் கண்ணாடி திரையிடப்பட்ட முகப்பில் ஒரு சீட்டு தோன்றும், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம் ஆகியவை 7 வினாடிகளுக்கு அதில் காண்பிக்கப்படும். அதன்பின் இந்த சீட்டு சீல் செய்யப்பட்ட VVPAT பெட்டியில் விழுந்துவிடும்.  

7 /7

வேட்பாளர்கள் சின்னத்திற்கு பின் கடைசியாக நோட்டாவுக்கு, அதாவது மேலே குறிப்பிடப்பட்ட யாருக்கும் எனது வாக்கு இல்லை (None Of The Above - NOTA) என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களின் விருப்பப்படி அதற்கும் வாக்களிக்கலாம்.