கடகத்தில் உதயமாகும் புதன்... வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ‘சில’ ராசிகள்!

புதன் உதயம் பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை 14 வெள்ளிக்கிழமை, புதன் கிரகம் கடகத்தில் உதயமாகிறது. இந்த உதயத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

 

அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளை போலவே, கிரக நிலைகளில் ஏற்படும் வேறு மாற்றங்கள், வக்ர நிலைகள், உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

 

1 /7

கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகத்தை வலுவாகக் கொண்ட ஒரு நபர், தனது பேச்சின் மூலம் மக்களைக் கவரும் சக்தியை கொண்டுள்ளார். தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.

2 /7

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இளவரசன் புதன் 14 ஜூலை 2023 அன்று கடகத்தில் உதிக்கப் போகிறார். புதனின் உதயம் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை புதன் அஸ்தமனத்தால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும். இதனுடன் சில ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் சில ராசிகளின் வாழ்க்கையில் உதயத்தை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை தொடுவார்கள்.  

3 /7

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம். வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

4 /7

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வேலை நன்றாக நடக்கும். புதிய வேலைக்கான தேடல் நிரைவடையும். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்யலாம். நிறைய பணம் கிடைக்கும். இது உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

5 /7

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பல விஷயங்களில் நன்மைகளை தருவார். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், ஆனால் நிலைமை கட்டுக்குள் இருக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.

6 /7

கன்னி: புதனின் உதயம் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைத் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும் ஆசை நிறைவேறும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.