சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் சூடாகிறதா? இதோ ஈஸி டிப்ஸ்

சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் இயல்பை விட அதிகமாக சூடானால், அதன் பின்னணியில் இது அடிப்படை பிரச்சனைகள் இருக்கலாம்.

 

சில மொபைல்கள் சார்ஜ் போட்டவுடன் சூடாகிறது. சார்ஜ் செய்யும் போது போன் லேசாக சூடாவது இயல்பானது, ஆனால் போன் அதிகமாக சூடாக இருந்தால் அது பெரிய பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

 

1 /6

நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் செயலியை பயன்படுத்தும்போதோ மொபைல் சூடாகிறதா?. அப்படியென்றால் உங்கள் மொபைல் மல்டி டாஸ்கிங் செய்ய ஏற்ற மொபைல் இல்லை என்பதால், ஒரே நேரத்தில் மொபைலை சூடாக்கும் விஷயங்களை செய்யாதீர்கள்.  

2 /6

உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்ய மூன்றாம் தரப்பு சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்தினால், உங்கள் ஃபோனை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. அசல் சார்ஜர்கள் பயன்படுத்தவும்.  

3 /6

மொபைலில் ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால்கூட வெப்படைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் எப்போது அளவுக்கதிகமான ஸ்டோரேஜை மொபைலில் வைக்க வேண்டாம்.  

4 /6

அதேபோல் மொபைல் சார்ஜ் ஆன பின்பும் தொடர்ச்சியாக சார்ஜரிலேயே வைத்துக் கொண்டிருப்பதும் மொபைல் சூடாவதற்கு ஒரு காரணமாக இருக்கும். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்.  

5 /6

ஒருவேளை மொபைல் ஹேக் செய்யப்பட்டிருந்தால் கூட அளவுக்கு அதிகமாக சூடாக வாய்ப்பு இருக்கிறது. இணையம் பயன்படுத்தும்போதெல்லாம் உங்கள் மொபைல் சூடானால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.   

6 /6

எனவே உடனடியாக மொபைல் தொழில்நுட்ப உதவியைக் கொடுப்பவரை நாடி உங்கள் மொபைல் சூடாவதற்கான பிரச்சனையை சரிசெய்து கொள்ளவும். சீரியஸயாக எடுக்காவிட்டால் மொபைல் வெடிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.