அழகுடன் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடும் கறிவேப்பிலையின் ஆரோக்கிய குறிப்பு

Curry Leaves For Hair: உயிரற்ற கூந்தலுக்கும் புத்துயிரூட்டும் கறிவேப்பிலை! இரும்புச்சத்து கொண்ட கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தினால் முடியழகை சூடலாம்?

பல நோய்களுக்கு அருமருந்தாகும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தினால் கூந்தல் அழகாகும்? இப்படி பயன்படுத்திப் பாருங்க...

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

1 /5

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய், முடி உதிர்வதை தடுக்கும் சிறந்த கூட்டணி ஆகும்.தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சூடாக்கி, ஆற வைத்த பிறகு, தேவைப்படும்போது, தலைக்கு தேய்த்து வந்தால், சிறந்த ஹேர் ஆயில் ரெடி. இது தலைமுடிக்கு புத்துயிர் கொடுக்கிறது.

2 /5

கறிவேப்பிலை கலந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களில் முடி கொட்டுவது நிற்பதுடன், புதிய முடிகள் முளைப்பதையும் காணலாம்.

3 /5

கறிவேப்பிலை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

4 /5

கறிவேப்பிலையை டீ செய்து குடித்தால் முடி கருமையாகிவிடும். இதற்கு முதலில் கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரையை கலக்கவும். இந்த டீயை தயாரித்து ஒரு வாரம் குடிக்கவும். இந்த தேநீர் உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது. மேலும், முடி வெள்ளையாவதையும் தடுக்கிறது.

5 /5

முகத்திற்கு இயற்கையான பொலிவைக் கொண்டுவர கறிவேப்பிலை பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறிவேப்பிலை முகத்தின் பொலிவையும், நிறத்தையும் அதிகரிக்கும். இதை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம் (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)