குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் SBI மற்றும் Kotak Mahindra Bank

புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்தியாவின் சிறந்த கடன் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) ஆகியவை வீட்டுக் கடன் விகிதங்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளதால், வீடு வாங்க விரும்புவோருக்கு, இது ஒரு நல்ல நேரம். 

Lowest Home Loans in India: குறைந்த வட்டி விகிதங்கள், செயலாக்க கட்டணம் மீதான தள்ளுபடிகள், பெண்கள் பெயரில் வீடு வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வங்கிகள் அறிவித்துள்ளன. 

ALOS READ | உங்கள் கனவு இல்லத்தை வாங்க சிறந்த வாய்ப்பு; இந்த வங்கியில் வீட்டுக் கடன் SBI-யை விட குறைவு!

1 /5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI): எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. 6.70% முதல் வட்டி விகிதங்களுடன் 70 அடிப்படை புள்ளிகள் (bps) வரை வட்டி சலுகையை வங்கி இப்போது வழங்குகிறது. இந்த சலுகை மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதால், இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடியையும் வழங்குகிறது. கடன் வாங்குபவரின் சிபில் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் அமைந்துள்ளது.

2 /5

எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி (Home Loan Interest Rates) விகிதங்கள் சிபில் மதிப்பெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70% வட்டியும், 75 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு 6.75% வட்டியில் தொடங்குகின்றன.

3 /5

5 பிபிஎஸ் (bps) கூடுதல் வட்டி சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் யோனோ செயலி (YONO App) வழியாக விண்ணப்பிக்கலாம். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடன் வாங்கும் பெண்களுக்கு சிறப்பு 5 பிபிஎஸ் (bps) சலுகை வழங்கப்படுகிறது.

4 /5

கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): கோடக் வங்கி தனது வீட்டுக் கடன் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 10 அடிப்படை புள்ளிகள் (bps) குறைப்பதாக அறிவித்துள்ளது. 

5 /5

இந்த சிறப்பு சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் மார்ச் 31 வரை 6.65 சதவீதத்திற்கு வீட்டுக் கடன்களைப் பெற முடியும் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் வரையறுக்கப்பட்ட கால சலுகை. செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடியையும் வழங்குகிறார்.