யூரிக் அமிலத்தை குறைத்து மூட்டு வலிக்கு குட்பை சொல்ல இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

Uric Acid Control: நம் உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது மிக அவசியமாகும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சில உணவுகளை கொண்டே யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க முடியும். 

Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம். அதில் யூரிக் அமில பிரச்சனையும் ஒன்று. யூரிக் அமில அளவை குறைக்க உதவும் பழங்களை பற்றி இந்த பதவில் காணலாம். 

1 /8

இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைப் போல யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது பல பலவித உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

2 /8

பல இயற்கையான வழிகளில், சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவை குறைக்கலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /8

வைட்டமின் சி மற்றும் ஆக்சிடென்ட்கள் நிறைந்த ஆரஞ்சு பழம் இரத்தத்தில் உள்ள பியூரினை செயலற்றதாக்கி யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியே அனுப்புவதில் உதவி புரிகிறது. இது சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

4 /8

புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கலந்த குருதிநெல்லி என்ற கிரான்பெர்ரியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் அதாவது டீடாக்ஸ் செய்வதற்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் ஏற்ற பழமாக உள்ளது. 

5 /8

நாவல் பழங்களை உட்கொள்வதால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுகின்றன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு அபாயகரமான ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் பிற கூறுகளையும் வெளியே அனுப்புவதில் உதவுகின்றன. மூட்டு வலிக்கு நிவாரணம் அளிப்பதில் நாவல் பழம் மிகவும் உதவியாக இருக்கும்.

6 /8

வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், புரதச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. யூரிக் அமில நோயாளிகளுக்கு இது சிறந்த பழமாக பார்க்கப்படுகிறது.

7 /8

கிவி பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துகளாகும். இந்தப் பழம் யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றுவதுடன் மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.