பழமா பழச்சாறா? உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது தற்போது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். 

பெரும்பாலும் மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் உடல் எடையை குறைக்க, வழக்கமான, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். சிலர் தங்கள் நாட்களை பழங்கள் அல்லது பழச்சாறுகளுடன் தொடங்குகிறார்கள். உடல் எடையை குறைக்க பழங்கள் சிறந்ததா அல்லது பழச்சாறு சிறந்ததா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /8

சரியான பழங்கள்: உங்கள் உடலுக்கு ஏற்ப சரியான பழங்களை சாப்பிடுகிறீர்களா? ஏனெனில் பலருக்கு எந்தப் பழத்திற்கு ஒவ்வாமை இருக்கிறது, எந்தப் பழம் தங்களுக்குப் பலன் தருகிறது என்பது பற்றிய புரிதல் இருப்பதில்லை. இதை தெரிந்துகொள்வது அவசியமாகும். 

2 /8

சத்துக்கள் நிறைந்துள்ளது: பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இவற்றை உட்கொண்டவுடன் உடலுக்கு அவசியமான ஆற்றலும், புத்துணர்ச்சியும் கிடைக்கின்றன. பழங்களில் உள்ள இயற்கை இனிப்பு அல்லது சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்கும். 

3 /8

பழமா பழச்சாறா: இப்போது காலையில் வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவது நல்லதா அல்லது ஜூஸ் குடிப்பது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. இந்த பதிவில் இதை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

4 /8

எடை இழப்புக்கு பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உண்மையில், பழத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது வயிற்றின் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது, அதே போல் எடை இழப்பு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.   

5 /8

நாள்பட்ட நோய்களை நீக்கும்: பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உடலில் உள்ள நாள்பட்ட நோய்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பெர்ரி, ஆப்பிள், பீச், சிட்ரஸ் பழங்கள் மற்றும் திராட்சைகளை உட்கொள்ளலாம். 

6 /8

பழச்சாறும்: பழச்சாறும் உடலுக்கு நல்ல விளைவுகளை அளிக்கின்றது. ஆனால் பழங்கள் கொண்டு பழச்சாறு தயாரித்த பிறகு, அவற்றில் உள்ள நார்ச்சத்தின் அளவு குறைகிறது. பழச்சாறு தயாரிப்பதில், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் குறைக்கப்படுகின்றன. ஜூஸ் தயாரிக்கும் போது இதில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரிகளும் அதிகரிக்கும்.

7 /8

பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள் அதை குடிப்பவர்களின் உடல் நலனிற்கு மிகவும் கேடு விளைவிக்கும். இவற்றில் அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதால் உடலுக்கு சில உபாதைகள் ஏற்படக்கூடும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.