பித்த வெடிப்புகள் நீங்கி தாமரை பாதங்களை பெற ‘5’ எளிய வழிகள்!

பாதங்களில் வெடிப்பு என்பது பலர் சந்திக்கும் பிரச்சனை. இது உடல்நலப் பிரச்சனை இல்லையென்றாலும், சில சமயங்களில் எரிச்சலானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும்.  வறட்சியால் தோல் வெடிப்பு ஏற்பட்டு பாதங்களின் அழகும் பாதிக்கிறது. அதற்கான  சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.

1 /5

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் பாத வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை  வெதுவெதுப்பான நீரில் கலந்து, இந்த நீரில் கால்களை ஊறவைத்தால், வறண்ட சருமம் மென்மையாகி, பித்த வெடிப்புகள் நீங்கும்.

2 /5

வாஸ்லைன்: கால்களுக்கு ஈரப்பதத்தை கொடுக்க வாஸ்லைன் அல்லது சருமத்தை மென்மையாக்கும் க்ரீமைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் கால்களை ஈரப்பதமாக்குங்கள். இதனால் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.

3 /5

தேன்: தேன் சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசிங் ஏஜென்ட். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் சேர்த்து, அந்த நீரில் உங்கள் கால்களை நனைக்கவும். இதற்குப் பிறகு, ஸ்க்ரப்பிங் மூலம் தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகும்.

4 /5

வெதுவெதுப்பான நீர்: உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். கடினமான சருமத்தை அகற்ற லூஃபா, கால் ஸ்க்ரப்பர் அல்லது பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தவும். பின்னர், வாஸ்லைன் அல்லது வேறு ஏதேனும் மாய்ஸ்சரைசர் மூலம் உங்கள் பாதங்களை ஈரப்பதப்படுத்தவும்.

5 /5

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவினால், சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும் சிறந்த பொருட்களில் ஒன்றாகும்.