மாங்காயை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா... கெட்டதா... இதை பாருங்க!

Raw Mango: மாங்காயை பச்சையாக சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதுவரை பலருக்கும் இது தெரிந்திருக்காது என்பதால் இதனை இங்கு காணலாம்.  

  • Mar 31, 2024, 19:17 PM IST

கோடை சீசனில் தர்பூசணி, பலாப்பழம் உள்ளிட்டவற்றை போல் மாம்பழமும் அதிகம் கிடைக்கும். அதேபோன்று மாங்காயும் சந்தைகளில் அதிகம் கிடைக்கும் என்பதால் பலரும் அதனை தற்போது சாப்பிட விரும்புவார்கள்.

 

 

 

1 /7

மாங்காயில் வைட்டமிண் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.    

2 /7

மாங்காயில் குடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியா இருக்கிறது. எனவே இது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.  

3 /7

மாங்காயை பச்சையாக சாப்பிடும்போது அதில் துவர்ப்பு சார்ந்த குணங்கள் அதிகமிருக்கும். இதனால் உங்கள் வாயில் பிரச்னை வராது. குறிப்பாக, வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் குணமாக்க உதவும்

4 /7

பச்சை மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான நொதிப்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் உணவை எளிதாக செரிமானம் செய்து, செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

5 /7

பச்சை மாங்காயில் வைட்டமிண் ஏ இருப்பதால் இது கண்களுக்கும் நல்லதாகும். 

6 /7

பச்சை மாங்காயை சாப்பிட்டால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7 /7

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொது தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.