கோவிட் -19 தொற்றுக்கு ஆளான மத்திய பாஜக அமைச்சர்கள் யார் என்று தெரியுமா? முழு பட்டியல்

இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய் குறைந்தது ஏழு மாதங்களாக பரவி வருகிறது. இந்த நோய் நமது வாழ்க்கை முறை, சமூகம் மற்றும் வணிகத்தை பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 1.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் குழுவில் குறைந்தபட்சம் ஒரு டஜன் உறுப்பினர்கள் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரை தவிர மற்ற அனைவரும் மீண்டு வந்துள்ளனர். ஒரு சிலர் குணமாகி வர அதிக நாட்கள் ஆனது. (புகைப்படம் PTI)

1 /12

சுரேஷ் அங்காடி (Suresh Angadi): கோவிட் -19 தொற்றால் இறந்த ஒரே மத்திய அமைச்சர் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆவார். செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் AIIMS மருத்துவமனையில் இறந்தார். 65 வயதான இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.

2 /12

அமித் ஷா (Amit Shah): கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மோடி அமைச்சரவையின் மிகப்பெரிய முக்கியத் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆகஸ்ட் தொடக்கத்தில் COVID-19 உறுதியானதை அடுத்து, அவர் குருகிராமின் மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று குணமான பிறகு, வீடு திரும்பினார்.

3 /12

ஸ்மிருதி இரானி (Smriti Irani): சமீபத்தில் coronavirus உறுதி செய்யப்பட்ட மற்றொரு முக்கிய உறுப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவார். அவர் தனது தொற்றுநோய் குறித்து ட்விட்டரில் அறிவித்தார். மேலும் தன்னுடன் தொடர்புகளையும் தங்களை சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

4 /12

நிதின் கட்கரி (Nitin Gadkari): மோடி அமைச்சரவையில் தொற்றுநோய்க்கு ஆளான மற்றொரு முக்கிய அமைச்சர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சர் நிதின் கட்கரி. செப்டம்பர் நடுப்பகுதியில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. அவரது COVID-19 சோதனை முடிவுகளுக்குப் பிறகு அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

5 /12

தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan): ஆகஸ்ட் தொடக்கத்தில், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தனது சமூக ஊடகங்களில் கோவிட் -19 இன் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் தன்னை பரிசோதித்தார். கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரதான் குணமடைந்தது மட்டுமல்லாமல், கட்டாக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரத்த பிளாஸ்மாவையும் வழங்கியுள்ளார்.

6 /12

பிரல்ஹாத் ஜோஷி (Pralhad Joshi): அக்டோபர் தொடக்கத்தில், மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், அவர் இப்போது நலமாக இருக்கிறார்.

7 /12

ராம்தாஸ் அத்தவாலே (Ramdas Athawale): ஏப்ரல் மாதத்தில் "கோ கொரோனா கோ" (Go Corona Go) கோஷத்தை உருவாக்கிய மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே, அக்டோபர் பிற்பகுதியில் அவ்ருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

8 /12

கைலாஷ் சவுத்ரி (Kailash Choudhary): மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். (படம்: முகநூல்)

9 /12

அர்ஜுன் ராம் மேக்வால் (Arjun Ram Meghwal): இந்த அப்பளத்தை சாப்பிட்டால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறி ஒரு உள்நாட்டு "பாபிஜி பப்பட்" பிராண்டிற்கு ஒப்புதல் அளித்த மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் மேக்வால், ஆகஸ்ட் தொடக்கத்தில் கோவிட் பாசிட்டிவ் சோதனை செய்து எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். அவர் அதே மாதத்தின் நடுப்பகுதியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

10 /12

பிரகலாத் சிங் படேல் (Prahlad Singh Patel): மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் செப்டம்பர் நடுப்பகுதியில் கோவிட் -19 இருப்பது தெரியவந்தது. அவர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதோடு அவரது அமைச்சகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் அவருக்கு COVID-19 உறுதி செய்யப்பட்டதால், பலருக்கு ஒரு பயத்தை உண்டாக்கியது. இருப்பினும், படேல் இப்போது நலமாக இருக்கிறார்.

11 /12

ஸ்ரீபாத் ஒய் நாயக் (Shripad Y. Naik): ஆகஸ்ட் மாதம் கோவிட் பாசிடிவ் சோதனை செய்தபின், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், அவரது சக அமைச்சர்கள் போல எளிதில் குணமாகவில்லை, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

12 /12

கஜேந்திர சிங் ஷெகாவத் (Gajendra Singh Shekhawat): ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (அனைத்துக்கும் ஆதாரம்/படங்கள்: பி‌டி‌ஐ)