கோடீஸ்வர யோகம்.... புதன் பெயர்ச்சியால் இந்த ராசிகள் மீது பண மழை

Mercury Transit 2023 in Virgo, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில் புதன் கிரகம் செல்வம், வியாபாரம், பேச்சுத்திறமை, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. 

புதன் கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் தொழில், பொருளாதார நிலை, பேச்சாற்றல் போன்றவற்றில் தாக்கம் ஏற்படுகின்றது. தற்போது புதன் சிம்ம ராசியில் உள்ளார். விரைவில் அவர் கன்னி ராசிக்கு மாறுகிறார். புதன் கன்னி ராசியின் அதிபதி ஆவார். கன்னி ராசியில் புதனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலன் அளிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /8

புதன் கிரகம் செல்வம், வியாபாரம், பேச்சுத்திறமை, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக இருப்பதால், மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றது.

2 /8

பொதுவாக அனைத்து கிரகங்களின் அனைத்து விதமான மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல வித மாற்றங்களை கொண்டு வரும். இவை சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும்.

3 /8

புதன் பெயர்ச்சி: தற்போது புதன் சிம்ம ராசியில் உள்ளார். விரைவில் அவர் கன்னி ராசிக்கு மாறுகிறார். புதன் கன்னி ராசியின் அதிபதி. கன்னியில் அவரது பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். 

4 /8

ராசிகளில் தாக்கம்: புதனின் பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிக சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். இதனுடன், இவர்கள் பெரும் பணப் பலன்களையும் பெறலாம். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

5 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் தங்கள் தொழில் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனில் இருந்து விடுபடலாம். மாணவர் வகுப்பு தேர்வு மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். 

6 /8

கன்னி: புதன் கன்னி ராசியில் தான் பெயர்ச்சியாகவுள்ளார். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பலன் தரும். இவர்களின் பணி சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறலாம், இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். உங்கள் ஆளுமை சிறப்பாக இருக்கும்.   

7 /8

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரம் இவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் இருந்தால் இப்போது அது தீரும். உங்கள் தைரியம் அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவலக்ளை உறுதிப்படுத்தவில்லை.