எலும்பு இரும்பு போல் ஸ்ட்ராங்காக இருக்க இந்த சூப்பர் உணவுகள் போதும்

Calcium Rich Foods: உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக பல், எலும்பு போன்றவற்றில் இதன் விளைவுத் தோன்றத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் இந்த குறைப்பாட்டை நீக்கலாம்.

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படத் தொடங்கினால் உடலில் பலவேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். இதை தடுக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் பற்றி நம் அனைவருக்கும் பொதுவான அறிவு உள்ளது. பாலில் கால்சியம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாலை விட அதிகம் கால்சியம் சத்திருக்கும் சில உணவுகள் உள்ளன. அவை என்ன உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

1 /6

சோயா பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது. அதனுடன் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. ஒரு கப் சோயா பாலில் 6 கிராம் புரதம் உள்ளது. இதனை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.

2 /6

பாதாமில் கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கப் பாதாம் பாலில் பசுவின் பாலை விட அதிக கால்சியம் உள்ளது.  

3 /6

ஓட்ஸ் பால் கால்சியம் குறைப்பாட்டிற்கு சிறந்த பொருளாகும். இதில் கால்சியம் நிறைந்துள்ளது.   

4 /6

ஆரஞ்சு சாற்றில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே கால்சியம் குறைப்பாடு உள்ளவர்கள்  இந்த ஜூஸை குடிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 10 அவுன்ஸ்க்கு மேல் குடிக்கக்கூடாது.  

5 /6

தயிரில் கால்சியம் சத்து அதிகளது உள்ளது. குறிப்பாக பாலை விட அதிக கால்சியம் தயிர்ல உள்ளது. நீங்கள் ஆனால் இனிப்பு சேர்க்காத தயிர் சாப்பிடுவது குறிப்பாக நன்மை பயக்கும்.  

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.