மூளை ஆரோக்கியம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் கொய்யா..!

Guavas Health Benefits: நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது முக்கியம். அதிலும், குறிப்பாக, ஊட்டசத்துக்க்களின் களஞ்சியமாக இருக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன

கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். இதனை அடிக்கடி உட்கொண்டால், நரம்பு தளர்ச்சி முதல் கண் பிரச்சனைகள் மூதல் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைவதோடு, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

1 /9

மூளை ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில்  உள்ள வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6, மூளைக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி  நரம்புகளை தளர்த்துகிறது.

2 /9

கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி என்பது இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன். இது அழற்சி செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ஹிஸ்டமின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்துகிறது.  

3 /9

கொய்யாப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்த உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும், கொய்யா மிகவும் நல்லது.

4 /9

தைராய்டு ஹார்மோன் அளவை மேம்படுத்தும் தாமிர சத்து கொய்யாவில் உள்ளது. இதனால், தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது. தாமிரம் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமம். 

5 /9

கொய்யாப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-9 நிறைந்துள்ளது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

6 /9

கொய்யாவில் உள்ள லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உயிரணுக்களுக்கு ஏற்படும் நேரடி சேதத்தைத் தடுக்கிறது. இதனால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது

7 /9

கொய்யா நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழம். முதலாவதாக, இது நார்ச்சத்து நிறைந்தது, இரண்டாவதாக, இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் அவசியம் தேவை.

8 /9

கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக இருக்க உதவுகிறது. முதுமை என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன், முதுமை எளிதில் அண்டாமல் ஒத்தி போடலாம்.  

9 /9

உணவில் நார்ச்சத்து இல்லாததால் தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து பெருங்குடலை சுத்தம் செய்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.