ஆயுர்வேத பீடி என்றால் என்ன? மகேஷ் பாபு சொன்னது இந்த பீடி தானா?

Ayurvedic beedi: குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு பீடி குடிப்பது போல் நடித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

1 /5

மகேஷ் பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தான் குண்டூர் காரம். கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. படத்திற்கு இரண்டு வித விமர்சனங்கள் வந்துள்ளது.  

2 /5

இந்த குண்டூர் காரம் படத்தில் நடிகர் மகேஷ் பாபு நிறைய இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் அவர் மீது கடும் கண்டனங்கள் எழும்பியது.  

3 /5

இன்னிலையில், இது குறித்து பேசிய நடிகர் மகேஷ் பாபு, நான் புகைபிடிக்க மாட்டேன் என்றும், மெலும் புகைபிடிப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார். படத்தின் தொடக்கத்தில், எனக்கு வழக்கமான பீடி கொடுத்தன்ர். ஆனால் அதனால் எனக்கு தலைவலி வந்தது. பின்னர் எனக்கு ஆயுர்வேத பீடியை கொடுத்தனர். கிராம்பு இலைகளால், புதினா வாசனையுடன் அந்த பீடியில் புகையிலை பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.  

4 /5

இந்த வகை பீடிகள் இயற்கையான மூலிகைகள், மசாலாப் பொருட்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 100% நிகோடின் இல்லாத வகையில் இந்த பீடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.   

5 /5

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கிய குண்டூர் காரம் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.