வெயில் காலத்தில் தூக்கம் கெட்டுப்போகிறதா... இதை செஞ்சா மணிக்கணக்கா தூங்கலாம்!

Sleep In Summer Season: கோடை காலத்தில் பலருக்கும் சரியான தூக்கமில்லாமல் உடல்நலப் பிரச்னை வரும் நிலையில், இதையெல்லாம் செய்தால் தூங்கும்போது எந்த பிரச்னையும் இருக்காது.

  • Apr 05, 2024, 00:20 AM IST

சரியாக தூக்கம் வராததற்கு மனநிலை சார்ந்தும், உடல்நிலை சார்ந்தும் பல காரணங்கள் இருந்தாலும் புறச்சூழலும் ஒருவரின் தூக்கத்தை கெடுக்கும் காரணியாகும்.

 

1 /7

வீட்டில் அதிக வெப்பம் இருந்தாலும் பலருக்கும் தூக்கம் வராது. வெயில் காலத்தில் நன்றாக தூக்கம் வராததற்கு இதுவும் முக்கிய காரணம். ஏனென்றால் தூங்கும்போது உடல் குளிர்ச்சியடையும், புறச்சூழல் அதிக வெப்பமாக இருந்தால் உடல் இந்த மாற்றத்தை மேற்கொள்ள நேரமெடுக்கும். இதனால் தூக்கம் கெடும்.     

2 /7

கோடை காலத்தில் காலையில் சீக்கிரமே வெளிச்சம் வீட்டிற்குள் வந்துவிடும். வெயில் அறைக்குள் வந்துவிட்டாலே வெளிச்சம் அதிகரிக்கும். இதனால் பலருக்கும் விரைவாகவே விழிப்பு வந்துவிடும். இதுவும் தூக்கம் கெடுவதற்கான முக்கிய காரணி. அந்த வகையில் வெயில் காலத்தில் நன்றாக தூக்கம் வர செய்ய வேண்டியதை தொடர்ந்து காணலாம்.   

3 /7

முடிந்தளவிற்கு வீட்டின் அறையை 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வைத்துக்கொள்ளவும். அதாவது காற்றோற்றம் இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். மேலும், இரவிலும் வெளிச்சம் வராதவாறு அறையை வைத்துக்கொள்ளவும். 

4 /7

தூங்குவதற்கு வெகுநேரத்திற்கு முன்னரே மொபைல், தொலைக்காட்சி, லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதை நிறுத்திவிடவும்.  

5 /7

இரவில் குளித்துவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். குளிக்க முடியவில்லை என்றாலும் கால்களை தண்ணீரால் கழுவிக்கொண்டு தூங்கினாலும் நல்ல தூக்கம் வரும்.   

6 /7

கேஃப்பின் பொருள்கள் அதிகமிருக்கும் காப்பி போன்ற பொருள்களை தூங்குவதற்கு முன் தவிர்க்கவும். இது தூக்கத்தை கெடுத்துவிடும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொது தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. இதனை கடைபிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இந்த தகவல்களுக்கு Zee News பொறுப்பேற்காது.