இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களுக்கு பிரஷர் இருக்கலாம் - உடனே பாருங்க

Symptoms Of High Blood Pressure: உயர் ரத்த அழுத்தம் என்பது உடல்நல பிரச்னைகளில் முக்கியமானவை. அந்த வகையில் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம். அந்த வகையில், அந்த 7 அறிகுறிகளை தெரிந்துவைத்துக்கொள்வது நன்மை தரும். 

  • May 14, 2024, 23:11 PM IST

இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் வழிவகுக்கும்.எனவே சீரான இடைவெளியில் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

1 /7

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அது கண்களின் ரத்த நாளங்களை பாதிக்கும். இதனால் பார்வை கோளாறு ஏற்படும். சிறிய பார்வை கோளாறு ஏற்பட்டாலும் அதுகுறித்து மருத்துவரை ஆலோசிக்கவும்.     

2 /7

அடிக்கடி தலைவலிப்பதும் உயர் ரத்த அழுத்தம இருப்பதற்கான அமைதியான அறிகுறிகள் ஆகும்.   

3 /7

நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தாலும் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. 

4 /7

சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம்.   

5 /7

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் ஒழுகும். சிறிய ரத்த நாளங்களை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கும்.   

6 /7

இதய துடிப்பு சீராக இல்லை என்றாலும் அதிகமாக இதயம் துடித்தாலும் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. 

7 /7

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களாகும். எனவே இதனை கண்டு பதற்றமடையாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.