ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பு, கார்கள் பற்றிய முழு விவரங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

 

1 /4

ரியல் எஸ்டேட் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை 22 நிறுவனங்களில் செயல்படும் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள்.  

2 /4

இந்தியாவிலேயே மிக சொகுசான பகுதியாக கருதப்படும் மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் தான் ஆனந்த் மஹிந்திராவின் வீடு அமைந்துள்ளது.  கலையின் மீது இவருக்கு மிகப்பெரிய ஆர்வமுள்ளது, அதன் வெளிப்பாடாக பல விலைமதிப்பற்ற கலை பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார்.  

3 /4

மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, மஹிந்திரா ஸ்கார்பியோ என், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக், மஹிந்திரா TUV300, மஹிந்திரா XUV700 மற்றும் மஹிந்திரா தார் போன்ற உயர் ரக வாகனங்களை ஆனந்த் மஹிந்திரா வைத்திருக்கிறார்.  

4 /4

மஹிந்திரா அறக்கட்டளை மூலம், ஆனந்த் மஹிந்திரா பல தொண்டு முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று பல உதவிகளை செய்து வருகிறார்.  மேலும் மஹிந்திரா குழுமம் மூலம் உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் இவர் தொழில் மேற்கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றார்.