நானியின் இந்த 5 சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Nani Movies: நானியின் நடிப்பில் இந்த மாதம் ஹாய் நன்னா படம் வெளியாகி உள்ளது.  நானி நடிப்பில் வெளியான மற்ற சூப்பர் ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.

 

1 /5

Yevade Subramanyam (2015)  நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, மாளவிகா நாயர், நாசர், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள படம் ஏவடா சுப்ரமணியம். இப்படம் வெளியானதும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.  ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.  

2 /5

Bhale Bhale Magadivoy (2015) மாருதி இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம் பலே பலே மகடிவோய். இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  நானி, லாவண்யா திரிபாதி, முரளி சர்மா, நரேஷ், வெண்ணெலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.  

3 /5

Jersey (2019) நானி நடிப்பில் வெளியான முக்கியமான படங்களில் ஒன்று ஜெர்சி. கௌதம் தின்னனுரி இயக்கிய இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஹரிஷ் கல்யாண், சத்யராஜ், ஜெயபிரகாஷ், பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹாட்ஸ்டாரில் படத்தை பார்க்கலாம்.  

4 /5

Shyam Singha Roy (2021) 2021 ஆம் ஆண்டு வெளியான முக்கிய சமூக பிரச்சனையை பற்றி பேசிய படம் ஷியாம் சிங்க ராய். நானி, கிருத்தி ஷெட்டி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ராகுல் ரவீந்திரன், அபினவ் கோமதம் ஆகியோர் நடித்த இப்படம் வெளியானதும் மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. நெட்பிளிக்ஸில் படத்தை பார்க்கலாம்.  

5 /5

Ante Sundaraniki (2022) 2022 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் Ante Sundaraniki. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நானி, நஸ்ரியா நாஜிம், ரோகினி, நரேஷ், அழகம் பெருமாள், நதியா ஆகியோர் நடித்துள்ளனர்.  நெட்பிளிக்ஸில் படத்தை பார்க்கலாம்.