Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடித்த பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..

Fahadh Faasil With Vijay : மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர், பகத் பாசில். இவர், நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Fahadh Faasil With Vijay : மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு, நாளுக்கு நாள் தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் ஏறிக்கொண்டே போகிறது. காரணம், அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவரை இன்னும் சிலர் நடிப்பு அசுரன் என்றும் கூட அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவிற்காக தனது முதிர்ச்சியான முயற்சிகளை கொடுத்து வரும் இவர், நம்ம ஊர் நடிகர் விஜய்யுடன் இணைந்து போட்டோ எடுத்திருக்கிறார். அந்த போட்டோவை இங்கு பார்ப்போம். 

1 /7

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இன்னும் சில மாதங்களில் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கும் இவர், GOAT படத்தில் நடித்து வருகிறார். இவரைப்போலவே மலையாளத்தில் பெரிய நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். 

2 /7

பகத் பாசிலை தமிழ் ரசிகர்களுக்கு நஸ்ரியா மூலமாகத்தான் தெரியும். தாங்கள் கனவுக்கன்னியாக எண்ணிக்கொண்டிருந்த நஸ்ரியாவை திடீரென்று ஒரு நடிகர் திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்கிறாரே...என்று அனைவரும் பகத் பாசில் மீது கடும் கோபத்தில் இருந்தனர். 

3 /7

ஆனால், அந்த கோபம்-வன்மம் எல்லாம் அவரது நடிப்பை திரையில் பார்த்தவுடன் காணாமல் போனது. வேலைக்காரன் படத்தில் முதன் முதலில் தமிழ் படத்தில் நடித்த இவர், தனக்கு கிடைத்த வில்லன் ரோலை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். 

4 /7

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த பகத்திற்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது, ‘விக்ரம்’ திரைப்படம். இந்த படத்தில் இவர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தார். 

5 /7

பகத் பாசிலை  ‘நடிப்பின் அசுரன்’ என குறிப்பிடும் ரசிகர்கள், அவர் தன் கண்களாலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். 

6 /7

பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் ‘ஆவேசம்’ படம் வெளியானது. இந்த படம் திரையரங்களில் வெளியான போது தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பினை பெற்றது. அதே போல, தற்போது ஓடிடியில் ரிலீஸான பிறகும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

7 /7

பகத் பாசிலும், விஜய்யும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.