ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்! வெளியானது டைட்டில்

தர்பார் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இந்தியில் இயக்குகிறார்.

தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், இதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கியிருந்தார். துப்பாக்கி படத்தின் ரீமேக்காக அக்ஷய் குமார் நடித்த ஹாலிடே திரைப்படம் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1 /5

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் சில ஆண்டுகள் இருந்துள்ளார்.  

2 /5

அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சமீபத்தில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறார்.  

3 /5

நடிகர் சல்மான் கான் ரம்ஜான் பண்டிகையை குறிவைத்து தனது படங்களை ரிலீஸ் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

4 /5

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு சிக்கந்தர் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   

5 /5

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்கிற சூப்பரான அறிவிப்பை சல்மான்கான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.