முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: முதல் முறையாக தமிழர் - சிங்களர் இணைந்து அஞ்சலி

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 05:39 PM IST
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: முதல் முறையாக  தமிழர் - சிங்களர் இணைந்து அஞ்சலி title=

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது

2009ம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படி கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு கொழும்புபில் உள்ள காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில், வரலாற்றிலேயே முதல் முறையால தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.

கடந்த காலங்களில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிலழ்ச்சிகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  பகுதியில் தான் நடக்கும். அதோடு, இதற்கு அரசு தரப்பில் கட்டுபாடுகளும் தடைகளும் போடப்படும்.  ஆனால், இந்த ஆண்டு அரசுக்கு எதிராக மக்கள் கூடி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்தியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நினைவேந்தல், தலைநகர் கொழும்பில் அதிபர்  செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் நடந்துள்ளது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.  ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்த அரசு பயன்படுத்தும் திடலிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது ஒரு வரலாற்று நிகழ்வு எனலாம்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று நிறுவப்பட்டு, இனம் கடந்து மக்கள் கூடி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளில் உதவியோடு இருந்த இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக இருந்தனர். இலங்கை வடக்கு பகுதியில்  இருந்த முள்ளிவாய்க்கால் பகுதி விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு பகுதியின் ஒரு பகுதியாகும். 

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது, இங்கு இருந்த  தமிழ் ஈழ மக்கள் கூடியிருந்த போது,  கூட்டத்தின் நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலில் பலர் காணாமல் போயினர். நூறுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்தனர்.

மேலும் படிக்க| Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News