15 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2023, 04:45 PM IST
  • விமானம் புறப்படும் நேர மாற்றம் குறித்து ஏர் இந்தியா ஊழியர்கள் பயணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
  • விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.
  • தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என விமானத்தை தவறவிட்ட பயணிகள் குற்றம் சாட்டினர்.
15 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்! title=

விஜயவாடா: விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. குவைத் செல்லும் விமானம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டது. முன்னதாக, நான்கு மணி நேரம் கழித்து மதியம் 1.10 மணிக்குப் புறப்பட இருந்த நிலையில், சுமார் 15 பயணிகளால் அதில் ஏற முடியவில்லை.

"பயணிகளுக்கு நேரம் மாற்றியமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை பின்பற்றவில்லை. முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, ஏஜென்ட்கள் புறப்படும் நேரம்  மாற்றி அமைக்கப்பட்டது  குறித்து தெரிவிக்கவில்லை. இப்போது, அந்த பயணிகள் குவைத் செல்லும் மற்றொரு விமானத்திற்காக அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும்," கன்னவரம் விமான நிலைய இயக்குனர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் புறப்படும் நேர மாற்றம் குறித்து ஏர் இந்தியா ஊழியர்கள் பயணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என விமானத்தை தவறவிட்ட பயணிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க | 54 பயணிகளை ‘அம்போ’ என விட்டுவிட்டு பறந்த விமானம்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சிங்கப்பூர் செல்லும் விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக புறப்பட்டு, 30 பயணிகளை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜனவரி மாதம் நடந்தது. மற்றொரு சம்பவத்தில், டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானம், பயணிகள் பெட்டியில் ஏறுவதற்காக காத்திருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. 

பெங்களூரு விமான நிலையத்தில், விமான பயணிகளை விமானத்திற்கு கூட்டிச் செல்லும் பஸ்ஸிஸ் 55 டெல்லி விமானப் பயணிகள் இருந்த நிலையில், அவர்களை விட்டுச் செல்ல வழிவகுத்த "பல தவறுகளுக்காக" விமான நிறுவனத்திற்கு DGCA காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்ட விமான நிறுவனம், விமான பயணிகளை ஒருங்கிணைப்பதில் தவறு ஏற்பட்டதன் காரணமாக இது நிகழ்ந்ததாகக் கூறியது. அடுத்த 12 மாதங்களில் எந்தவொரு உள்நாட்டுத் துறையிலும் பயணிக்க பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் ஒரு இலவச டிக்கெட்டையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணங்கள் உயர்கின்றன!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News