கார்த்திகை தீபம்: ஆனந்த்திடம் உண்மையை உடைத்த ரியாவின் கணவர்... அடுத்து நடக்க போவது என்ன?

Zee Tamil Karthigai Deepam Today's Episode Update: ஆனந்த்தை சந்தித்து உண்மையை உடைத்த ரியாவின் கணவர்.. அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2024, 12:48 PM IST
  • கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
  • ரியா ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள்,
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
கார்த்திகை தீபம்: ஆனந்த்திடம் உண்மையை உடைத்த ரியாவின் கணவர்... அடுத்து நடக்க போவது என்ன? title=

Zee Tamil Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியும் தீபாவும் ரியா பற்றி ஆனந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம்,  இன்றைய எபிசோடில் (Karthigai Deepam), அதாவது, மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் அவளை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்துகின்றனர், அதன் பிறகு தீபாவும் ஆமாம் மாமா அவர் சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

பிறகு மது வெளியே கிளம்பி வரும் போது ரியா இதை பார்த்து விட ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள், ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்து விட்டதாகவும் அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி பேசுகிறாள். 

இதனால் ஆனந்த் அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட என்று கேட்க ரியா வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன் என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள். 

மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!

அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News