விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

#SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 11, 2024, 04:13 PM IST
  • ரவி கிரண் கோலா படத்தில் விஜய் தேவரகொண்டா.
  • பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
  • அடுத்த ஆண்டு படம் வெளியாக உள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! title=

'ராஜா வாரு ராணி காரு' படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. 

மேலும் படிக்க | விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் புதிய படங்கள்!

இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க கிராமிய பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும், இவர் திரையில் தோன்றுவதை பார்ப்பதற்கு அதிரடியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  ரவி கிரண் கோலா இதற்கு முன் 'ராஜா வாரு ராணி காரு' எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். 

மேலும் அவர் இப்படத்தின் திரைக்கதைக்காக அயராது உழைத்து, நுட்பமாக செதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவும் இந்த திரைப்படத்தை மிகவும் தரமான படைப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை பான் இந்திய அளவில் உருவாக்குகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் தேவரகொண்டா தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் அவரது திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அவர் நம்புகிறார். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மேலும் படிக்க | Star Movie : ஒரே நாளில் இவ்ளோ கலக்‌ஷனா! ஸ்டார் படத்தின் வசூல் விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News