Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்

Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2024, 12:05 PM IST
  • 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் வெளியீடு.
  • கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 'தக் லைஃப்'
  • நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்
Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட் title=

Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தக் லைஃப் திரைப்படம்:
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தான் தக் லைஃப் (Thug Life). கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தக் லைஃப் படக்குழு விவரம்:
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர், த்ரிஷா ஆவார். இவர், ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Bison Kaalamaadan Movie: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் சிம்பு ஆவார். இவரும் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று வட இந்தியாவில் டெல்லியின் சங்கட் மோச்சன் ஹனுமான் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் அப்டேட் ஒன்று வீடியோ மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி அதில் நாளை காலை 10 மணிக்கு படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Latest News Samantha Ruth Prabhu Instagram Story : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா!? ரசிகர்கள் அதிர்ச்சி.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News