தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!

Thalaivar 170: ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 170ஆவது படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது   

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2023, 06:49 PM IST
  • டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார்.
  • யார் அந்த நடிகர்..?
தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!  title=

ஜெயிலர் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இதில் புதிதாக ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைவர் 170: 

ஜெய் பீம் படத்தை இயக்கி பிரபலமான டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான நடிகர்களின் தேர்வு மற்றும் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. ரஜினிகாந்தின் ஸ்கிரீன் டெஸ்டிங் சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக ரஜினிக்கு பிரபல சிகை அலங்கார நிபுணர் ஒருவர் அலங்காரம் ஹேர் ஸ்டைல் செய்து விட்டார். 

மேலும் படிக்க | அடங்கேப்பா..! ‘இந்த’ பேய் படத்தில் 10 பாடல்கள் இருக்கா..? இசையமைப்பாளர் சொன்ன தகவல்..!

Thalaivar 170

புதிய நடிகர்..! 

ரஜினியின் 170 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில், புதிதாக இணைந்துள்ள நடிகர் சர்வானந்த். இவர், தமிழில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான ‘கணம்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு சில நாட்கள் இருந்த போது இவர் விபத்துக்குள்ளானார். ஆனால், இதில் அவருக்கு பெரிதாக அடி ஏதும் படவில்லை. 

இவருக்கு பதிலாக…

தலைவர் 170 படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது. தற்போது அவருக்கு பதிலாகத்தான் சர்வானந்த் அந்த ரோலில் ஓகே செய்யப்பட்டுள்ளாராம். நானி, தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீச்சியமான முகமாக வலம் வருகிறார். இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வெளியாகும் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்திருந்த ‘தசரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இவரும் இருக்கிறாரா..? 

ரஜினியின் 170வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், பாலிவுட்டிற்கு அமிதாப் பச்சன்தான் சூப்பர் ஸ்டார். தற்பாேது ரஜினிகாந்துடன் இவர் இணையவுள்ள தகவல் கசிந்தில் இருந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர். 

வில்லன் இவரா..? 

மலையாள நடிகர் பகத் பாசில் தலைவர் 170 படத்தில் ரஜினி-அமிதாப் பச்சனுக்கு வில்லனாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்த ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி வரவேற்பினை பெற்றது. படத்தின் பெயரை விட பகத் பாசிலின் கதாப்பாத்திரமான ரத்ன வேல் பாண்டியனின் பெயர் பல இடங்களில் உச்சரிக்கப்பட்டன. இதையடுத்து, இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரை ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘காவாலா’ பாடலுக்கு மாஸாக நடனமாடிய ஜப்பானிய தூதுவர்..! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News