மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி?

Mari Tamil Serial: பார்வதியின் மகளாக ஆதாரங்களுடன் என்ட்ரி கொடுத்த மரியா.. அடுத்து நடந்தது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2024, 12:54 PM IST
  • ​பார்வதியின் மகளாக ஆதாரங்களுடன் என்ட்ரி கொடுத்த மரியா
  • மரியா பார்வதியின் மகளா?
  • வருத்தம் இல்லையே மாரியிடம் கேட்கும் பார்வதி
மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி? title=

Jan 2024 Mari Tamil Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி, ஸ்ரீஜா, ஹாசினி ஆகியோருக்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மாரியை பார்வதி தனது மகளாக தத்தெடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது மூன்று கர்ப்பிணி பெண்களையும் உட்கார வைத்து தீயசக்தி அண்ட கூடாது என்பதற்காக வெப்பக்கயிறை கட்டி விடுகின்றனர். பிறகு சீமந்தம் நல்லபடியாக நடந்து முடிகிறது. இது முடிந்த கையோடு பார்வதி மாரியை மகளாக ஏற்று கொள்ள போவதாக சொல்கிறாள். அதற்கான ஏற்பாடுகள் தொடங்குகிறது. 

இந்த சமயத்தில் மரியா ஒரு நிமிஷம் என என்ட்ரி கொடுத்து நான் தான் பார்வதி அம்மாவோட மகள் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், அதோடு மரியாவை நம்ப மறுத்து என்ன ஆதாரம் இருக்கு எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!

மரியா சின்ன வயதில் நான் போட்டிருந்த ஜெயின், துணி இது தான் என்று எடுத்து காட்டுகிறாள். நான் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தேன். அதுக்கப்புறம் என்னை தத்தெடுத்தவங்க அமெரிக்கா கூட்டிட்டு போய்ட்டாங்க. இவ்வளவு நாளா அவங்க தான் என்னுடைய அப்பா அம்மானு நினைச்சிட்டு இருந்தேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் என் அப்பா அம்மா சென்னையில் இருப்பதாக தெரிய வந்தது. விசாரித்து பார்க்கும் போது தான் எனக்கு உண்மை தெரிய வந்தது என்று சொல்கிறாள். 

serial

மாரி சீரியலில் பார்வதியும் மரியா தான் தன்னுடைய மகள் என்று நம்பி சந்தோசப்படுகிறாள். அவனை கட்டி தழுவி மகிழ்கிறாள். கடைசியாக மாரியிடம் பார்வதி உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே என்று கேட்க எல்லாரும் உங்க பொண்ணு கிடைக்கணும்னு தான் ஆசைப்பட்டோம், அது இப்போ நடந்திருக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் எடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News