என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

மும்பையில் நடைபெற்ற என்எம்ஏசிசி கலாசார மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது மிகப்பெரிய கனவு குறித்து முகேஷ் அம்பானியிடம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2023, 09:36 AM IST
  • முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் கவர்ந்தார்.
  • என்எம்ஏசிசி திறப்பு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்து கொண்டார்.
  • என்எம்ஏசிசி அரங்கில் நடிக்க ஆசைப்படுவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்! title=

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா முகேஷ் அம்பானி அவரது பெயரில் மும்பையில் பிரம்மாண்டமாக ஒரு கலாசார மையத்தினை திறந்து வைத்துள்ளார்.  இந்த கலாசார மையத்தின் திறப்பு விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.  சுமார் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தின் திறப்பு விழா நிகழ்வில் பல கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மேலும் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்தார்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சௌந்தர்யா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார், கருப்பு உடையில் ரஜினியின் ஸ்டைலிஷான லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | இயக்குனர் ஹரியின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிய சூர்யா!

தற்போது நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார், தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் கலாசார மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின்(என்எம்ஏசிசி) கலை மற்றும் கட்டிடக்கலை குறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  கலாசார மையத்தின் பிரம்மாண்ட அழகாலும், சிறப்பான கட்டிடக்கலையினாலும் தான் ஈர்க்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  மேலும் அம்பானிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார், அதில் இந்திய கலைகளை மேம்படுத்துவதற்காக மும்பையில் பிராட்வே பாணி கலாச்சார மையத்தைத் திறந்ததற்காக ரஜினிகாந்த், முகேஷ் அம்பானி குடும்பத்தை பாராட்டி எழுதியிருந்தார்.  

இந்த அரங்கின் அற்புதமான வசதியைப் பார்த்த பிறகு, இந்த என்எம்ஏசிசி திரை அரங்கில்தான் நடிக்க விரும்புவதாகவும், இந்த அரங்கில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் இப்போது எனது மிகப்பெரிய கனவாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.  என்எம்ஏசிசி கலாசார மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த தவிர ஆமீர் கான், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் மற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், ஜான்வி கபூர், வருண் தவான், வித்யா பாலன், கரீனா கபூர், சித்தார்த்த மல்ஹோத்ரா, ரன்வீர் சிங் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News