மாமியார் ராஜேஸ்வரி நெஞ்சுவலியால் மருத்துவனையில்! சிகிச்சையளிப்பாளா ஷன்மதி?

Peranbu Serial Update: கல்யாணத்தை நிறுத்திய ஷண்மதி‌‌.. நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராஜேஸ்வரி‌! பேரன்பு சீரியல் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2023, 12:44 PM IST
  • பேரன்பு சீரியலில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
  • வானதியை புரிந்து கொள்வாரா கார்த்தி?
  • வெளிச்சத்திற்கு வருமா அமுதாவின் சூழ்ச்சி?
மாமியார் ராஜேஸ்வரி நெஞ்சுவலியால் மருத்துவனையில்! சிகிச்சையளிப்பாளா ஷன்மதி? title=

பொதுமக்களுக்கு பிடிக்கும் பாணிய்ல் பல்வேறு சீரியல்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது பேரன்பு மெகாத் தொடர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு.   

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பேரம்பு சீரியலில், பல வருடமாக குழந்தை இல்லாமல் தவிக்கும் அமுதா மற்றும் சுந்தரம் தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அவள் தான் வானதி. தத்தெடுத்த சில ஆண்டுகளில் அமுதா, சுந்தரத்திற்கு குழந்தை பிறக்கிறது. இதனால் தத்தெடுத்த மகள் வானதியை பிடிக்காமல் வீடு வேலைக்காரியாக நடத்துகிறாள் அமுதா.

சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ராஜ ராஜேஸ்வரியின் மகன் கார்த்திகேயனை திருமணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள் வானதி. திருமணம் ஆன பிறகு வானதி மற்றும் கார்த்திகேயனுக்கு நடுவே இருக்கும் மன வேறுபாட்டால் இருவரும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். மகனையும் மருமகளைஇயும் ஒன்றாக சேர்த்து வைக்க ராஜேஸ்வரி பல முயற்சிகளை மேற்கொள்கிறாள்.

ஒரு நல்ல மாமியார், மருமகள் உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக காண்பிக்கும் பேரன்பு சீரியலுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. 

பேரன்பு சீரியலில் கார்த்திக், ஷண்மதி கல்யாண ஏற்பாடுகள் நடக்க அமுதா சதி திட்டம் போடுகிறார். எஹிர் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

கார்த்திக், ஷண்மதி திருமணத்தில் ஆசிரம குழந்தைகளால் எல்லா உண்மைகளும் தெரியவர ஷண்மதி ராஜேஸ்வரியை கோபமாக திட்டிவிட்டு தன் வீட்டிற்கு செல்கிறாள்.  ராஜேஸ்வரிக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்படுகிறாள். அங்கு டாக்டர் ஷண்மதி வந்தால்தான் ராஜேஸ்வரியை குணப்பதுத்த முடியும் என்று சொல்லி விடுகின்றனர்.

அதனை தொடர்ந்து வாசன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஷண்மதியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள் அவள் அதிக வெறுப்படைகிறாள். பிறகு கார்த்திக் ஷண்மதியை அழைத்து வர அவள் வீட்டிற்கு செல்ல அவனை அடித்து அனுப்புகிறார்கள்.

ராஜேஸ்வரியைப் பற்றி எல்லா உண்மையும் தெரிந்த ஷண்மதியின் அம்மா மங்கை, வானதி, ராஜேஸ்வரி இடையேயான அன்பையும் ராஜேஸ்வரியின் பெருமைகளையும் கூற ஷண்மதி சற்று மனமிறங்குகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பேரன்பு சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய ட்விஸ்ட்! இனி ஒரு வீடு அல்ல..இரண்டு வீடு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News